பாஜக மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி அளித்த புகார் தொடர்பான வழக்கில் பாடலாசிரியர் சினேகனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக, நடிகையும் பாஜக நிா்வாகியுமான ஜெயலட்சுமி மீது சினேகன் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது அவதூறு பரப்பும் கவிஞா் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனா். ஆனால், யாா் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்த ஜெயலட்சுமி, சினேகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பாடலாசிரியா் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் நடிகை ஜெயலட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். இந்நிலையில் தினமும் காலை 10 மணிக்கு திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் நீதிமன்றம் சினேகனுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
newstm.in