15 வயது சிறுவன், தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவன், இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவனது தாத்தா, தாய், இளைய சகோதரி மற்றும் அத்தை ஆகியோரை ஈவு இரக்கமின்றி கோடாரியால் வெட்டி படுகொலை செய்தான்.
பேருந்து நடத்துநராக பணிபுரியும் சிறுவனின் தந்தை காலையில் வீட்டிற்குள் வந்தபோது, அங்கு இரத்தம் சிதறியிருப்பதையும், நால்வரின் உடல் வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் வீசப்பட்டதையும் கண்டார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். சிறுவனை தீவிரமாக தேடிவந்த போலீசார், அருகிலுள்ள சந்தையில் கைது செய்தனர். குற்றத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குற்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி பார்த்து வந்ததாக தெரிகிறது. அவன் கம்பியூட்டர் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வமுடையவனாக இருந்துள்ளான்.
கொலை செய்யும் போது, அவர்களின் அலறல் வெளியே கேட்காமல் இருக்க, அந்த சிறுவன் தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்திருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
newstm.in