
தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி மகேந்திர சிறங் தோனி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என்று தோனி மேசேஜ் அனுப்பியது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறியுள்ளார்.

தோனி உடனான உறவு தனக்கு கிடைத்த வரம் என்று கூறியுள்ள அவர், உண்மையான அக்கறையுடன் அணுகுபவர் தோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது எனக் கூறியுள்ளார்.
முன்னதாக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், கடந்த காலத்தில் நான் சேர்ந்து விளையாடிய ஒருவரிடமிருந்து மட்டும் செய்தி வந்தது. அது எம்எஸ் தோனி என்று விராட் கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in