தமிழகத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க கட்சித்தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைவராக இருந்தால், அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும், ஆளுநர் பதவியும் வழங்கப்படுவது வழக்கமாகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறாமல் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக உள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தற்போது மத்திய இணையமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியவர். அதே போல் தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு எம்பி பதவியும் பாஜக தலைமை வழங்கி வருகிறது.
மேலும், தமிழகத்தின் மூத்த பாஜக தலைவர்கள் ஆளுநர் பதவியும் வகிக்கின்றனர். முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மேற்கு வங்க பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு மூத்த தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது.
newstm.in