காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு – நெடுஞ்சாலைகள், கிராமங்கள் துண்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் சுமார் 6 அங்குல பனிப் பொழிவும் குரேஸ், மச்சில் ஆகிய இடங்களில் 12 அங்குல பனிப் பொழிவும் பதிவாகியுள்ளது.

சோனாமார்க் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடும் பனிப் பொழிவு காரணமாக ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பூஞ்ச் – ரஜவுரி இடையிலான மாற்றுப் பாதையான முகால் சாலை, பண்டிப்போரா – குரேஸ் சாலை ஆகியவையும் பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. உயரமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக அவை மாவட்டத் தலைநகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.