அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களை பூச்சிகள் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தரமில்லாத மதிய உணவு வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அதை நிரூபிக்கும் வகையில் அண்மையில் குழந்தைகளுக்கு வெறும் சாதத்துடன் உப்பு மட்டுமே கொடுக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டார்.
ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல் மாறாக புகார் தெரிவித்த நபரை கைது செய்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தற்போது வேறொரு அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வைட்டமின் கிடைக்கும் எனக்கூறி அப்பள்ளி தலைமை ஆசிரியர் பூச்சிகளை சாப்பிட கட்டயப்படுத்தியுள்ளார்.
தினமும் உணவின் பூச்சிகளை சேர்த்து சாப்பிட்டல் வைட்டமின் கிடைக்கும் என்று கூறி கட்டாயப்படுத்தி பூச்சிகளை உண்ணவைத்துள்ளார். இது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in