
உலகிலேயே மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை சீனாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60,000 பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை டாடா குழுமம் அமைக்கிறது.

இந்நிலையில் ஓசூரில் அமைய உள்ள புதிய ஆலை பிரமாண்டமாக அமையவுள்ளதாகவும், மூன்று மாதங்களில் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த தொழிற்சாலைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட்டால் ஏராளமான தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் தமிழகம் தொழில் துறையில் முன்னேற்றம் அடையும் என்றும் கூறப்படுகிறது.