தூங்கிக் கொண்டிருந்த கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய சைக்கோ மனைவி..!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள பாலிசார் கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினரிடையே சண்டை நடந்துள்ளது. இந்த சண்டைக்குப் பிறகு கணவன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது அந்தரங்க உறுப்புகளை மனைவி துண்டித்துள்ளார். இரவில் தொலைபேசியில் பேச வேண்டாம் என கணவன் மனைவியிடம் கூறியதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், இரவில் மனைவி போனில் பேசிக் கொண்டிருந்ததார். அதற்கு எதிரிப்பு தெரிவித்ததால் எனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு இடையூறாக இருந்ததால், அழைப்பை துண்டிக்கும்படி கூறியதால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தூங்கிக் கொண்டிருந்த கணவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். விசாரணையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது தெரியவந்தது. மேலும் அவர் மீது கடந்த காலங்களில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பார்மர் உதவி காவல் கண்காணிப்பாளர் நர்பத்சிங் ஜெய்தாவத் கூறுகையில், “இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் கணவரின் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றார். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.