அரியலூர், செந்துறையில் நாளை மின் தடை.. எந்த பகுதியெல்லாம் தெரியுமா..?

அரியலூர், தேளுர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.19-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணமாக, காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், ராஜீவ் நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்க சமுத்திரம், கொளப்பாடி, மங்களம் மற்றும் குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், தேளுர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி,ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம் மற்றும் மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் மின் விநியோகம் இருக்காது.

மேலும், செந்துறை துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.