சென்னை விமான நிலைய இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது.குறிப்பிட்ட ஒரு மா்மநபர் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறாா். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என்று மெயிலில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எத்தனை மணி? உள்நாட்டு விமான நிலையமா? சா்வதேச விமான நிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. அதோடு போலியா ஐடி உருவாக்கி, அதிலிருந்து இந்த மெயில் வந்திருந்தது. ஆனாலும் சென்னை விமான நிலையத்தில், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசாா், தமிழக உயா் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினா்.
இதையடுத்து, விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக, மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையம் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசாா், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.