ட்விட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்களின் ஒரு வருட உணவுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட 50% ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை அவர் நேரடியாக சந்தித்தார்.
அப்போது எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்களின் ஒரு வருட உணவுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரின் பதிவில் ” தலைமை அலுவலகத்தில் அதிகபட்சமாக 25%, குறைந்தபட்சமாக 10% ஊழியர்கள் மட்டுமே சாப்பிட்டுள்ளனர்.
ஆனால் உணவு சாப்பிடும் ஊழியர்களை விட அதனை சமைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரவு வேளைகளில், யாருமே இல்லாமல் உணவு சமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உணவு சலுகையை ரத்து செய்தேன் என பதிவிட்டுள்ளார்.
newstm.in