
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதனை ஏற்று, தமிழ்நாடு அரசு, பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் (25.10.22) அன்று விடுமுறை அறிவித்தது. மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை (நவம்பர் 19) பணி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
ஏற்கனவே அரசு அறிவித்தபடி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (நவம்பர் 19) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.