
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தது.
பக்தர்கள் உற்சாகமாக பஜனை பாடியபடி சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பேருந்து பத்தனம்திட்ட மாவட்டம் லாஹ அருகே விளக்கு வஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 8 வயது சிறுவன் மணிகண்டன் உயிரிழந்தான்.இந்த விபத்தில் 18 பேர் யமடைந்தனர். காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து இரண்டு கிரேன்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in