தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பன்னி வாசு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, துணை நடிகை சுனிதா போயா நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் பன்னி வாசு. இவர், கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அத்துடன் இவர் பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், “பன்னி வாசு என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நீதி வேண்டும்” என்று கூறி, துணை நடிகை சுனிதா போயா என்பவர் பன்னி வாசு தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெண் போலீசார், சுனிதா போயாவை உடைகளை உடுத்த வைத்தனர். அத்துடன், வெளியூரில் உள்ள தயாரிப்பாளர் பன்னி வாசு ஹைதராபாத் வந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அவரை அழைத்துச்சென்றனர்.
தயாரிப்பாளர் பன்னி வாசுவிற்கு எதிராக சுனிதா போயா போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி போராட்டம் நடத்தியிருக்கிறார். கடந்த மே மாதம் இதே அலுவலகம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு சுனிதா பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அப்போது புகார் அளித்திருந்தும் பன்னி வாசு மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி தான் தற்போது மீண்டும் சுனிதா போயா போராட்டம் நடத்தியுள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாமல் நான் 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் சுனிதா போயா கூறியுள்ளார்.