பிரபல நடிகர் ஆமிர்கானுக்கு ஐரா என்ற மகளும், ஜுனைத், ஆசாத் என்ற மகன்களும் உள்ளனர். 25 வயதாகும் ஐராவுக்கும், மும்பையை சேர்ந்த செலிபிரெட்டி ஃபிட்னெஸ் பயிற்சியாளர் நுபுர் ஷிகாரேவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் வைரலாகின. இருவரின் காதல் இந்தி திரையுலகில் பேசுபொருளாக இருந்த நிலையில், மகளின் காதலுக்கு ஆமிர் கான் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஐரா மற்றும் நுபுர் ஷிகாரேவின் நிச்சயதார்த்தம் மும்பையில் நேற்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள ஐரா மற்றும் நுபுர் ஷிகாரேவுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in