மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. 25ம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம்..!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒருவார காலம் கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கி தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தோ – சாரணிக் பாணியில் கட்டப்பட்ட அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. இந்த தூண்களின் உயரம் 82 அடி; அகலம் 19 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.