பொங்கல் பண்டிக்கைக்கு தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல திரைப்பட பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மெர்சல், விஸ்வரூபம் திரைப்படங்களுக்கு பிரச்னை வந்த போது அதிமுக அரசு திரைத்துரையினருக்கு உறுதுணையாக இருந்து திரைப்படத்தை வெளியிட உதவி செய்ததாக கூறினார்.
ஆனால் இன்று ரெட் ஜெயண்ட் பிடியில் திரை உலகம் உள்ளதாகவும், பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித் நடித்த துணிவு படத்தினை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. விஜய் நடித்த வாரிசு படத்தை வெளியிடும் உரிமை ரெட் ஜெயண்ட்க்கு கிடைக்கவில்லை.
எனவே ஆந்திராவில் வாரிசு படத்தினை வெளியிட முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திராவில் வெளியிட முடியாததால் இங்கும் வாரிசு வெளியிட முடியாத நிலை ஏற்படும். இதனால் துணிவு படம் மட்டும் வெளியாகி அதிகமான லாபத்தை உதயநிதியால் பார்க்க முடியும் என கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
newstm.in