அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய, எமெலிண்டா பவுலினோ டி ரிவாஸ் என்ற பெண் சக்கர நாற்காலி உதவியுடன் சென்றுள்ளார்.
ஆனாலும் அவரது சக்கர நாற்காலியின் சக்கரங்கள் சூழலாமல் இருந்தன. இதனை அமெரிக்க சுங்க துறை அதிகாரிகள் கவனித்தனர்.
அதனை தொடர்ந்து, சக்கர நாற்காலியை எக்ஸ்ரே பரிசோதனை செய்ய சுங்க துறை அதிகாரிகள் முடிவு செய்தநர். அதில், நான்கு சக்கரங்களிலும் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
28 பவுண்டு எடையுள்ள கொக்கைன் என்ற போதை பொருளை அந்த பெண் கடத்தி சென்றார். அதன் மதிப்பு ரூ.3.6 கோடி என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
newstm.in