என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தவர் காயத்ரி ரகுராம். அவ்வப்போது அவர் தனது கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இது பாஜகவுக்குள் அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அண்ணாமலையை எரிச்சல் படுத்தும் விதமாக பல கருத்துக்களை சொல்லி வந்திருக்கிறார். அண்ணாமலையை காயத்ரி ரகுராம் மறைமுகமாக விமர்சிப்பதாக கட்சிக்குள் ஒரு சலசலப்பு இருந்து வருகிறது.

பாஜக ஆதரவாளர் ஒருவர் காயத்ரி ரகுராமின் பெயரை குறிப்பிடாமல், ‘இருந்தா இரு இல்லாட்டி போ’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு செல்வகுமார் என்ற அண்ணாமலையின் ஆதரவு நிர்வாகி, லைக் போட்டிருந்தார் . இதை அடுத்து அந்த பதிவை குறிப்பிட்டு, ‘செல்வகுமார் எப்போது பாஜக தலைவர் ஆனார்?’ என்று கேலி செய்திருந்தார் காயத்ரி ரகுராம்.

தன்னை தமிழக பாஜக தலைவருக்கு எதிராக செயல்படுவது போல் சித்தரிப்பது ஏன்? என்று கேட்டிருந்தார். காசை வாங்கிக் கொண்டு அவர் போடும் கமெண்ட்களுக்கும் மூத்த தலைவர்களை திட்டி வேறு சிலர் போடும் கமெண்ட்களுக்கும் லைக் போடுங்கள் என்று அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் காயத்ரி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதை அடுத்து பாஜக தலைவர்கள் லைக் மற்றும் ரீடுவிட் செய்ய காசு கொடுக்கிறார்கள் என்கிற உண்மையை காயத்ரி ரகுராம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் தமிழக பாஜகவில் இருந்து அவர் ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதுவரைக்கும் காயத்ரி ரகுராமிடம் கட்சி நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு காயத்ரி ரகுராம், அவர் ஆரம்பத்தில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினார். அதை செய்து விட்டார். ஆனால் நான் வலுவாக திரும்பி வருவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 8 வருட உழைப்பை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும். என் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம்.

ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன். கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை. பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.