சென்னை மக்களே… குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்!!

கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதி மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் 28.11.2022 அன்று காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும் பகுதி 4-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

பகுதி-1 கைபேசி எண்.8144930901 திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம்

பகுதி-2 கைபேசி எண்.8144930902 மணலி

பகுதி-3 கைபேசி எண்.8144930903 மாதவரம்

பகுதி-4 கைபேசி எண்.8144930904 பட்டேல் நகர், வியாசர்பாடி தலைமை அலுவலகம்(சிந்தாதிரிப்பேட்டை) 044-4567 4567

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.