
சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர் சுந்தரவள்ளி (48). இவர், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசினார். இதற்கான ‘வீடியோ’ பரவியது. இதையடுத்து, சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சுந்தரவள்ளிக்கு 3500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கிரிஜாராணி உத்தரவிட்டார்.