சென்னையில் தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த புத்தாலா ஓம்கிரீஸ் என்ற மாணவன் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே வகுப்பறையில் இருந்து வெளியேறினார். பின்னர் புத்தாலா ஓம்கிரீஸ், திடீரென கல்லூரி வளாகத்தின் 6ஆவது மாடியில் இருந்து குதித்தார்.
இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவனின் பெற்றோர், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ளனர். பாடப்பிரிவில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in