கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்சுகூரைச் சேர்ந்த தியாமப்பா (58) என்பவர் வயிற்று வழியில் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி மூலம் சோதனை செய்ததில் அவரின் வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நாணயங்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சையில் அவரின் வயிற்றில் இருந்து 1, 2 மற்றும் 5 மதிப்புள்ள ஏராளமான நாணயங்களை அகற்றியுள்ளனர்.
அதன்பின்னர் அந்த நபர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள், அவர் பல மாதங்களாக நாணயங்களை விழுங்கி வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அவர் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடைகொண்ட 187 நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
newstm.in