
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு சென்னையில் நாளை 9 இடங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “12 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் நாளை (டிச.4-ம் தேதி) எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதன்படி, மாதவரம் வட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமாள் கோயில் தெரு, மாதவரம். திருவொற்றியூர் வட்டத்திற்கு ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர். பெரம்பூர் வட்டம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளி சாலை, பெரம்பூர், ஆலந்தூர் வட்டம் ஏஜெஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளி, ஆலந்தூர். எழும்பூர் வட்டம் எம்சிசி மேல்நிலைப்பள்ளி, பழைய எண்.78, புதிய எண்.46, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.
தண்டையார்பேட்டை வட்டம் சென்னை மேல்நிலைப்பள்ளி, எண்.731, டிஎச்.ரோடு. சோழிங்கநல்லூர் வட்டம் அய்யப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண்.20, 26, வேலு நாயக்கர் தெரு, சோழிங்கநல்லூர். அம்பத்தூர் வட்டம் சேது பாஸ்கர மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.நகர், ஒரகடம். மதுரவாயல் வட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, சன்னதி தெரு, மதுரவாயல் ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இணைய வழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். அலைபேசி, புத்தகம், கைப்பை மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.