
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழா இன்று நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
கடந்த 3ஆம் தேதி தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை காலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தின் போது மலையில் மீது ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இதற்கான அனுமதி சீட்டு காலை 6 மணியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகம், மாட வீதிகள், தற்காலிக பேருந்து, வாகன நிறுத்தங்கள் போன்ற இடங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ள அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காவல் மையங்கள், ‘மே ஐ எல்ப் யூ’ என்ற உதவி மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்கள், 26 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 108 அவசர ஊர்தி வாகனங்கள் 15 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தீபத் திருவிழாவில் 25 லட்சம் முதல் 30 லட்சம் பக்தர்கள் வரையில் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் 500 சிசிடிவி கேமார கொண்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்படுகிறது.
newstm.in