பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த செல்லுலாயுடு படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழில் குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.பின்னர் சொப்பன சுந்தரி நான் தானே” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல படங்களில் பாடி வந்த இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயமானது. திருமணத்திற்கு முன்னரே மணமகன் ஏராளமான கண்டிஷன்களை போட்டதால் அந்த திருமணமே வேண்டாம் என்று நிறுத்திவிட்டார் விஜயலட்சுமி. இதை அடுத்து 2018 ஆம் ஆண்டில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் அனுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபல பாடகர் ஏசுதாஸ் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த வருடத்தில் திடீரென்று தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவி வந்தன. அதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. விஜயலட்சுமி அது குறித்து எங்கேயும் பேசவில்லை.
இந்த நிலையில் தற்போது மனம் திறந்து ஒரு ஊடகத்திற்கு பேசியிருக்கிறார். என்னை திருமணம் செய்த நபர் ஒரு சைக்கோ என்பது போகப் போகத் தான் தெரிய வந்தது . என்னுடைய குறைகளை மட்டுமே எப்போதும் அவர் சுட்டிக்காட்டுவதையே முழு நேர வேலையாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்தார்கள் என் பெற்றோர். திருமணத்திற்கு பின்னர் அவர்களை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்.
இந்த கொடுமை எல்லாம் விட எனது பாடல் தொழிலை நான் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் இசைக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவேன் . அவரால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை .
பல் வலி என்றால் அதை பொறுத்துக் கொள்வீர்கள். ஒரு அளவுக்கு மேல் வலி அதிகமானால் பல்லை பிடுங்குவதை தவிர வேறு வழி இல்லையே என்று தனது விவாகரத்து குறித்து மன வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.