பேச்சுலர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை திவ்யபாரதி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
தனது புகைப்படங்களை அவர் வெளியிடும் போது பலரும் கேலியாக கமெண்ட் பதிவிடுவர். அதைக் கண்டும் காணாமல் இருந்து வந்த திவ்யபாரதி, தற்போது, உடல் கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் உடல் வடிவம் போலியானது, இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என சிலர் கூறுகின்றனர். ஃபேண்டா பாட்டில் போன்று இருக்கிறேன் எனவும் கிண்டல் செய்கின்றனர்.
இப்படியான கேலி கிண்டல்களை நான் கல்லூரி காலத்திலிருந்தே சந்தித்து வருகிறேன். அப்போது எல்லாம் என் உடலையே நான் வெறுக்க நினைத்தேன். இயற்கையாகவே என் உடல் அமைப்பு இப்படிதான் உள்ளது.
நான் உடற்பயிற்சி கூட செய்து கிடையாது. சக பெண்களே நாம் எப்போதும் வலிமையாக அன்பாகவே இருப்போம் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இவருக்கு சக பெண் நடிகர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக நடிகைகள் மீது உருவக் கேலி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in