மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் இன்று நள்ளிரவு 1 மணிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னையை நெருங்கிவிட்ட புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழு வீச்சில் கரையைக் கடக்கத் தொடங்கும்.
புயலின் கண் பகுதி இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 85 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
காலை விடிவதற்குள் புயல் முழுவதும் கரையைக் கடந்துவிடும். புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக ஈசிஆர் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் அநேக இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
newstm.in