
பரவூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் ஷீலா தம்பதியரின் மகன் வினுகிருஷ்ணன் மற்றும் கல்லுவத்துக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீகுமார் மற்றும் சரிதா ஆகியோரின் மகள் சாண்ட்ரா எஸ் குமார் ஆகிய இருவருக்கும் திருமணம் நேற்று பாரிப்பள்ளி பாம்புரம் மகாவிஷ்ணு கோவிலில் நடைபெறுவதாக இருந்தது.
மணமகள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, மணமகன் சாண்ட்ராவுடன் குவாரி குளத்திற்கு சென்றார். செல்ஃபி எடுக்கும் போது சாண்ட்ரா குளத்தில் தவறி விழுந்தார். உடனே வினுவும் குதித்தார். இருந்தும் இரண்டு பேரும் தத்தளித்து கொண்டிருந்தனர்

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீ அணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பாரிப்பள்ளி எஸ்.எச்.ஓ., அல் ஜப்பார் தலைமையிலான போலீசார் மற்றும் நாவாய்குளத்தில் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து இருவரும் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதுகுத்தண்டு மற்றும் கால்களில் காயம் அடைந்த சாண்ட்ராவுக்கு மருத்துவமனை நிர்வாகம் மூன்று மாதங்கள் முழு ஓய்வு அளிக்க அறிவுறுத்தியது. அதன் பிறகு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.