மும்பையில் உள்ள கார் எனும் பகுதியில் 17 வயது சிறுவன் தனது தோழியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதோடு அதனை செல்பியாகவும் எடுத்துவைத்துக் கொண்டார்.
பின்னர் சிறுமியை தொடர்பு கொண்ட சிறுவன் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அந்த புகைப்படத்தை அழித்து விடுமாறு கெஞ்சியுள்ளார்.
அதை ஏற்றுக்கொள்ளாத சிறுவன் புகைப்படத்தை காட்டி மிரட்டி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில், தன்னோடு வருமாறு அந்த சிறுமியை அந்த சிறுவன் அழைத்துள்ளார்.
அதற்கு சிறுமி மறுத்த நிலையில் அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, சிறுவன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை கூறினார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in