இந்தியா மீது வைரஸை ஏவி விட்ட சீனா!…மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது சீனா கணினி வைரசை ஏவி விட்டது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணைய தளம் கடந்த நவம்பா் 23 ஆம் தேதி இணைய திருடர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் சா்வா்கள் முடங்கியது. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணையதள பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி டெல்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடா்ந்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின்படி இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் ‘சொ்ட்-இன்’ என்கிற இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை , சிபிஐ, என்.ஐ.ஏ. போன்ற முகமைகளும் விசாரணையை மேற்கொண்டன.

எய்ம்ஸின் இ-மருத்துவமனை சா்வா்களின் தகவல்கள் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட சா்வா்கள், கணினிகள் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளன. வைரஸ்களால் பாதிக்கப்பட்ட சா்வா்கள் தனியாக பிரிக்கப்பட்டு, பாதிக்கப்படாத மற்ற சா்வா்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ‘ரான்சம்வோ் கணினி வைரஸ்’ காரணமாக இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இதன் பின்னணியில் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்கள் முழுவதும் வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன .

இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் டெல்லி சர்வர்களை சீனா ஹேக் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 100 சர்வர்களில், தற்போது 5 சர்வர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெரிய அளவிலான பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 5 சர்வர்களிலிருக்கும் தகவல்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.அதே சமயம், நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள் இன்னும் செயல்படத் தொடங்கப்படவில்லை.

ஆய்வக சேவைகள் காகித வழியிலான முறையில் அதாவது ஆஃப் லைனில் இயங்குகின்றன என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வர்கள் மீட்கப்பட்டதன் மூலம், வெளிநோயாளிகள் பிரிவு பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் கடந்த திங்கள்கிழமை முதல் இணைய முறையில் கொண்டு வரப்பட்டன.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.