
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்ரகுராம் ராஜன் கலந்து கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் ஆம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ எனப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
தற்போது 98ஆவது நாளாக ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதே போல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மாநில தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் – நடிகைகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவளித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 100 நாள்களை நெருங்கியுள்ளது.
newstm.in