ஸ்ரீரங்கம் கோவில் கணக்குகளை மத்திய கணக்கு தணிக்கைத்துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வரவு-செலவு கணக்கு விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலமாக தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு விவரங்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், மத்திய கணக்கு தணிக்கைத் துறையினரைக் கொண்டு தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.
மனுதாரரின் கோரிக்கை ஏற்று, அவ்வாறு உத்தரவிடவும் முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தற்போது கோவில் நிர்வாகமும் மாற்றப்பட்டு விட்டதால், வழக்கு செல்லாததாகி விட்டது என்று நீதிபதிகள் கூறினர். எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in