சில நாட்களுக்கு முன்பு, வீணா கபூர் என்ற ஹிந்தி நடிகையை அவருடைய மகன் சச்சின் கபூர் தலையில் அடித்து கொலை செய்ததாக அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக செய்தி வெளியானது.
அத்துடன், உயிரிழந்த நடிகை வீணா கபூரின் உடல் மும்பையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நடிகை வீணா கபூர், தான் உயிருடன் இருப்பதாக கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர், “என்னைப் பற்றி உறுதி செய்யப்படாத வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை.
நான், என் மகனுடன் மும்பையில் உள்ள வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அந்த செய்தியை படித்து விட்டு பலரும் எனக்கு போன் செய்து விசாரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று அவர் கூறியுள்ளார்.