ஊர்க்காவல் படையில் காலி பணியிடம்: விண்ணப்பிக்க அழைக்கிறார் எஸ்பி..!

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் 41 காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 41 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இந்தத் தேர்வு வருகிற 21.12.2022 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது. மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.