உதகை – மேட்டுப்பாளையம் ரயில் சேவை நாளையும் ரத்து!!

உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளையும் (18.12.22) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டங்களில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் விழுந்தன.

இதையடுத்து தென்னக ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவையை 16ஆம் தேதி வரை ரத்து செய்தது. ஆனால் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இன்னும் முடியவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து, உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் ரயில் சேவை நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.