தென்காசி மாவட்டத்தில் நாளை (18.12.2022) பாவூர்சத்திரம் தென்காசி ரயில்வே கேட் மூடப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக எல்.சி. எண். 83 (பாவூர்சத்திரம் ரயில்வே கேட்) கிலோ மீட்டர் 90/600-700 பாவூர்சத்திரம் தென்காசி ரயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தாமல் மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி – தென்காசி பிரதான சாலையில் உள்ள இந்த ரயில்வே கேட் பகல் நேரத்தில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்கள், கேட் மூடப்பட்டிருந்தால் சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும்.
இதனால் ஏற்படும் தாமதம் நோயாளிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பராமரிப்புப் பணியை இரவு நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in