பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகம் ழுழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 6, 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் இருந்து ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை அளித்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.