வளர்ப்பு நாயான பிட்புல் 9 வயது சிறுமியின் முகத்தை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி மஹி, தனது வீட்டு வராண்டா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் அவர் வளர்க்கும் பிட்புல் நாயின் சங்கிலியை அவிழ்த்து நாயை வெளியே விட்டுள்ளார்.
அந்த நாய் வெளியே வந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாஹியை கடித்து குதறியது. பதறிப்போன சிறுமியின் குடும்பத்தினர், நாயை துரத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுமியின் முகத்தின் ஒரு பகுதி முற்றிலும் கிழிந்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறிய நிலையில், முகத்தில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.
அந்த நாயின் உரிமையாளர் நீண்ட காலமாவே அஜாக்கிரதையாக இருப்பவர் என்றும், அப்பகுதியினர் புகார் அளித்தும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ஹரியானாவின் காசியாபாத் நகராட்சியும் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகராட்சியும் பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது.
இந்த பிட் புல் ரக நாய் ஆபத்தான வளர்ப்பு பிராணி என்றும் வேட்டை நாய் என்பதால் இதை வளர்ப்பது அவ்வளவு உகந்தது அல்ல எனவும் விலங்கியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
newstm.in