
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 24ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான முறையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது மட்டுமல்ல ஹைதராபாதிலும் ஒரு பெரிய விழாவிற்கு தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்பாடு செய்துள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல் இன்று மதியம் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த வாரிசு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதனால் இந்த பொங்கல் விஜய், அஜித் ரசிகர்களுக்கு மாஸ் பொங்கலாக அமையப்போகிறது.
newstm.in