
அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம், ‘துணிவு’, மூன்றாவது முறையாக இந்த கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளனர். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலான ‘சில்லா…சில்லா’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.
இதையடுத்து தமன் இசையில் உருவாகியுள்ள ‘காசேதான் கடவுளடா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை எழுதி பாடியுள்ளார் பிரபல பாடலாசிரியர் வைசக். அவருடன் இணைந்து மஞ்சு வாரியர் பாடியுள்ளார். பட்டையை கிளப்பும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.