மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
அதில் மாநில நிதியமைச்சர்கள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பருப்பு, தோல் வகைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது. அதேபோல், எத்தனால் கலந்து பெட்ரோல் தயாரிக்கும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் பயோ எரிபொருளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கூட்டத்தில் 15 தலைப்புகள் விவாதிக்க பட்டியலிடப்பட்ட நிலையில், 8 அம்சங்கள் மட்டும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வரிவசூல் திருப்திகரமாக இருந்தாலும், புதிதாக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்காதது வருத்தமாக உள்ளது என்று கூறினார்.
newstm.in