14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் ஒன்று திறப்பதற்கு முன்பே இடிந்துவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கண்டக் பகுதியில் இன்று காலை பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
206 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பாலம் முழுவதும் உடைந்து ஆற்றில் மூழ்கியது.

கண்டக் நதியின் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 2012-13ஆம் ஆண்டு, பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாலத்தின் கட்டுமானப் பணி 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. பணிகள் 2017 ஆகஸ்ட் மாதம் முடிந்து திறப்பு விழாவுக்காக 5 ஆண்டு காலம் காத்திருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது.
newstm.in