ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் ரூபிக்கா (22) என்பவருக்கும், அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அன்சாரிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், ரூபிக்காவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரூபிகா கடந்த சில நாள்களாக மாயமானார்.
அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பெண்ணின் வீட்டருகே நாய்கள் எலும்புகளை உண்டு கொண்டிருப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.
எலும்புகள் மனித எலும்புகள் போல் இருந்ததால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் எலும்புகளை மீட்டெனர்.
சந்தேகமடைந்த காவல்துறையினர் அன்சாரியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பல துண்டுகளாக வெட்டி சிதைக்கப்பட்ட ரூபிகாவின் உடலை கண்டெடுத்தனர்.
பழங்குடியின பெண் ரூபிகாவை அன்சாரி கொலை செய்து 18 துண்டுகளாக வெட்டு சிதைத்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். மேலும் பெண்ணின் உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.
newstm.in