இனி சுடுகாடு செல்ல வேண்டாம்: வந்தாச்சு நடமாடும் தகன வாகனம்..!

ஈரோட்டில், தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் சகாதேவன், ரோட்டரி ஆளுநர் இளங்குமரன் ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.

கிராமப் புறங்களில், இறந்தவர்களின் உடலை விறகு அல்லது சாண வரட்டி மூலம் எரியூட்டுவது வழக்கம். இதற்கு, சுமார் 15,000 ரூபாய் வரை செலவு ஆகும். அத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தேவைப்படும். ஆனால், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் எரியூட்டி, இறந்தவரின் குடும்பத்திற்கு அஸ்தி வழங்கப்படும் என்று ரேட்டரி ஆத்மா நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

மேலும், நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஆத்மாவின் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என்றும், முழுக்க முழுக்க கேஸ் சிலிண்டர் பயன்படுத்தியே தகனம் செய்யப்படும் என்றும் இந்த வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தை எரியூட்ட ரூ7,500 கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.