
தென்காசி நகர இந்து முன்னணி பிரமுகர் குமார்பாண்டியனின் 16-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, “முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் மு.க.ஸ்டாலின். தேசபக்தி அமைப்பு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுங்கள், தேசத்துரோகி திருமாவளவன், சீமானை பிடித்து உள்ளே போடுங்கள் என உத்தரவிட்டிருந்தால் அவர் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியானவர் ஆனால் அவர் அவ்வாறு சொல்லவில்லை. திருமாவளவன் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்தால் ஸ்டாலினும் குற்றவாளி ஆவார்” என கூறினார்.

மேலும் “ஒன்றிய அரசு என பேசுபவர்கள் தேசத் துரோகிகள். மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடும் ஐஏஎஸ் அதிகாரிகளை உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத்தின் புல்டோசர் முன் நிறுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிஎஃஐ அமைப்புக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி நடைபெற்றது. தமிழக காவல்துறை தேசவிரோத, பிரிவினைவாத, தீயசக்திகளின் கூட்டாளிகள் என்பதற்கு இது உதாரணம். தமிழ் தேசியம் என்று சொல்பவர்கள் தேசத்துரோகிகள். குடியரசு தின ஊர்வலத்தில் பங்குகொள்ள நேருவால் அழைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கவில்லை. தேசபக்தியோடும் முதுகெழும்போடும் இருந்த 3 மாவட்ட எஸ்பிக்கள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது பாராட்டுக்குரியது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறையை கலைத்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளமாவது மிச்சமாகும். இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் தென்காசியில் நடந்த 4 கொலை குற்றவாளிகளை கைது செய்தால், தமிழ்நாடு டிஜிபி பற்றி விமர்சனம் செய்ததற்கு ஜனவரி 1-ம் தேதி நான் மன்னிப்பு கேட்பேன்.