டெல்லியில் இளம்பெண்ணிடம் மொபைல் திருடிய இளைஞர் ஓடும் ரெயிலிலிருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டார்.
டெல்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரெயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் மொபைல் போனை திருடியுள்ளார். தனது மொபைல் காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர்.
அப்போது, ஒரு இளைஞரிடம் அந்த மொபைல் இருந்ததையடுத்து, அங்கிருந்த பயணிகள்இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்று ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளனர்.
இதில், தில்கார் ரெயில் நிலையம் அருகே, ரெயில் கம்பத்தின் மீது அந்த நபரின் தலை மோதியதில், நிகழ்விடத்திலேயே அவர் பலியானார். இது தொடர்பாக, இளைஞரை ரெயிலிலிருந்து தள்ளிய நரேந்திர துபே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
#शर्मनाक…..
ट्रेन में मोबाइल चोरी के आरोप में यात्रियों नें युवक की जमकर की पिटाई। पिटाई के बाद शाहजहापुर के तिलहर के पास चलती ट्रेन से युवक को फेंका, युवक की हुई मौत। अयोध्या-दिल्ली एक्सप्रेस की जनरल बोगी का है मामला। बरेली जंक्शन जीआरपी ने आरोपी को किया गिरफ्तार। pic.twitter.com/6WLdCfKsoR— NCIB Headquarters (@NCIBHQ) December 19, 2022
இளைஞரை அடித்து உதைக்கும், அவர் கெஞ்சி கதறும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ஆதாரமாக வைத்து குற்றவாளி நரேந்திர துபே கைது செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
newstm.in