உலகம் முழுவம் வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. மக்களிடையே ஏற்பட்டிருந்த பொருளாதார முடக்கம், அனைத்துக் கொண்டாட்டங்களையும் களையிழக்கச் செய்திருந்தது. தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.
இதையொட்டி, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்தல், அலங்கார விளக்குகள் மற்றும் நட்சத்திரங்களை தொங்க விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், கிறிஸ்தவா்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் தங்கள் வீடுகளில், விதவிதமான நட்சத்திரங்களை தொங்க விட்டு அழகுப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜன.11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்