டாம் குரூஸை கண்டு வியந்த நடிகர் சூர்யா!….

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ஸ்டன்ட் காட்சியை கண்டு நடிகர் சூர்யா ஆச்சரியம் அடைந்துள்ளார்.

ஹாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் டாம் குரூஸ் அடுத்தடுத்து அதிரடியான ஆக் ஷன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் 7.

 

டாம் குரூஸ் மிகவும் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் சிறப்பான விஷயம் அவரின் சண்டைக் காட்சிகளுக்கு டூப் வைத்து நடிக்காமல் அனைத்து காட்சிகளிலும் அவரே நடிக்க விரும்புவது. விமானத்தில் இருந்து அவர் குதிப்பது போன்ற ஒரு சண்டைக் காட்சி வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வகையில் டாம் குரூஸ் நடித்த மற்றுமொரு ஆச்சரியமான சண்டைக் காட்சி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. அடுத்தாண்டு ஜூலை மாதம் வெளியாக உள்ளமிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட ஸ்டண்ட் காட்சியின் படப்படிப்பு வீடியோவை டாம் குரூஸ் வெளியிட்டுள்ளார்.

நார்வே நாட்டிலுள்ள உயரமான மலை முகட்டிலிருந்து பைக்குடன் அவர் கீழே குதிப்பதைப்போல் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் பாராசூட் உதவியுடன் படமாக்கப்பட்ட இக்காட்சிக்காக டாம் குரூஸ், 500 முறைக்கு மேல் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்தும், மேடு பள்ளமான மோட்டோ கிராஸ் ரேஸ் டிராக்கில் 13 ஆயிரம் முறை பைக்கில் தாவியும், பயிற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பலரும் அவரின் இந்த ரிஸ்க்கான சண்டைக் காட்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இந்த போஸ்டை ரீட்வீட் செய்துள்ளார். ஆச்சரியத்துடன் இதை நம்பமுடியவில்லை என்ற ஒரு குறிப்பையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

டாம் குரூஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாப் கன் – மேவரிக். இப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே ரூ 4,973 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது 1986 இல் வெளியான ‘டாப் கன்’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது; டாம் குரூஸின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுவாகும்.

அப்படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு ‘மிஷன் இம்பாசிபிள் 7 ‘ சீரீஸூக்காக மிகவும் கடுமையாக பல ஆபத்தான ரிஸ்க்குகளை எடுத்து வருகிறார் டாம். இப்படமும் நிச்சயம் ஒரு மாபெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.