
வேலூர் அமிர்தி பகுதியில் உள்ள வன உயிரினப் பூங்காவில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.
இந்த பகுதியில், இளைஞர்கள் சிலர் மது மற்றும் கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதும், செயின் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமிர்திக்கு வந்த தம்பதி ஒருவரிடம் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் வந்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர் ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றினர். பொதுமக்கள் வந்தவுடன் அந்தப் பெண் அந்த இளைஞரை தவறாக நடக்க முயற்சி செய்வாயா என அழுது கொண்டே செருப்பால் அடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் இதுவரை போலீசார் எந்த வழக்கும் பதியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், சமூக விரோதிகளுக்கு பயந்து பொதுமக்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை என்றும், போலீசார் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெவ்ஸ்டம்.in